Circle of Iron is a 1978 martial arts fantasy film co-written
by Bruce Lee, who intended to star in the film himself, but died before
production. After Lee's death in 1973, Silliphant and Stanley Mann completed
the screenplay, and Lee's part was given to Kung Fu television star David
Carradine.
மனித மனதை ஆற்றுப்படுத்தும்
கலைகளில் முக்கியமானது, இசை. இயன்ற போதெல்லாம்
வரம்பின்றி கேட்டு ரசிக்கலாம். இசைக்கு இன்றியமையாதவை கருவிகள். மயங்க வைக்கும் காற்றிசைக்
கருவிகளில் ஒன்று புல்லாங்குழல். காற்று இசைக்கருவி வகையைச் சேர்ந்தது புல்லாங்குழல். துளை வழியே
காற்றை ஊதி இசையை உருவாக்குவதால், துளைக்கருவி எனவும் அழைப்பர். ஸ்வரங்களை அடிப்படையாக
கொண்ட துளைகளை மூடித் திறக்கும் திறனுக்கு ஏற்ப, ஒலிக்கோர்வையை வித்தியாசமாக உருவாக்கலாம்.
இந்தியாவில், இரண்டு வகை புல்லாங்குழல்கள் உள்ளன. பன்சூரி என்ற வகையில்,
காற்று ஊதும் முத்திரை துளை ஒன்றும், ஸ்வரங்களுக்காக விரல் துளைகள் ஆறும் இருக்கும்.
இது, இந்துஸ்தானி இசையில் அதிகம் பயன்படுகிறது. மற்றொருவகை வேணு இவை தென்னிந்திய கர்நாடக
இசையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில்
எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக
கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள்
கொண்ட புல்லாங்குழல் ஆகும். புல் இன தாவரமான மூங்கில்
மரத்தில் செய்யப்படுவதால், புல்லாங்குழல் என பெயர் பெற்றது. இளமையும், மூப்புமின்றி, நடுவயதுள்ள மூங்கிலை வெட்டி, ஓராண்டு நிழலில்
உலர்த்தி பதப்படுத்தி புல்லாங்குழல் தயாரிப்பர். சீரான விட்டமுள்ள ஒடுங்கிய குழாய்
தான் இசை எழுப்ப பயன்படும். வாயால் ஊதும் துளையை, முத்திரை என்பர். அதை, ஆற்றுவாய்
என்பதும் உண்டு.
Of the many instruments
associated with Carnatic music- Flute is divine. A melodic instrument for the
most part, the flute has a clear and bright sound with a distinctive warmth,
refinement, and subtlety to its tone. ..
..in Western world there is another close relative – it is not unusual for a
performer who plays the flute to switch to the piccolo, alto flute, or bass
flute. The piccolo is pitched an octave higher than the flute and produces a
shrill, high-pitched sound. With a length of 30 cm, the piccolo resounds loudly
in the performer's right ear when the instrument is played. The alto flute has
a slightly gentler sound, while the bass flute boasts a total tube length of around
130 cm and is pitched an octave below the flute.
We have seen and heard
many flautists in Carnatic music. Palladam Sanjeeva Rao was the flautist who in very early days, gave the Carnatic flute
its stature as a concert worthy instrument. Tiruvidaimarudur Ramaswamy Mahalingam affectionately known as Mali, was a flautist
who revolutionised the style of flute-playing in Carnatic music. In Northern
India, the name readily comes to mind is Pundit Hariprasad Chaurasia. Recently heard another - Paras Nath, another
flautist hailing from a well-known family of musicians from Varanasi who have
traditionally been in this world for two and a half centuries.
The greatest of em’ all is of
course the divine Flautist Lord Krishna – who mesmerized everyone as He grew up
in Gokul.
திருவல்லிக்கேணி தவன உத்சவத்தில் மூன்றாம் (கடைசி) நாள் 20.3.2025 மாலை ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள் "முரளிக்கண்ணன்" திருக்கோலத்தில் புறப்பாடு கண்டருளினார். மாயக்கண்ணன்
குழலூதி வந்தால், லோகமனைத்தும் மயங்கும். இன்று தெள்ளியசிங்கனை தரிசனம்
செய்தோர்கள் அவன் வடிவழகில் மயங்கி, பக்தி பரவசத்தால் கண்ணீர் மல்க அவனையே
நினைத்து, அவனையே வேண்டி ஆனந்தம் அடைந்தார்கள்.
கண்ணபிரான்
ஊதின குழலினோசை செவியில் விழப்பெற்ற கந்தருவர்கள் - பரமபோக்யமான இக்குழலோசையாகிற
வலையிலே கட்டுப்பட்டு, “இனிப் பாட்டுத் தொழிலாகிற பெருஞ்சுமையில் நமக்கு யாதொரு
அந்வயமுமில்லை” என்று நிச்சயித்தொழிந்ததுமன்றி, கீழுள்ள காலமெல்லாம் தாம் பாடித் திரிந்தபடியை
நினைத்து இவ்வளவு நாட்காளாக இதை கேட்காமல் இருந்தோமே என வருந்தினராம் என்கிறார் நம்
பெரியாழ்வார் தமது 'பெரியாழ்வார் திருமொழி பாசுரத்தில்"
செம்பெருந்தடங்கண்ணன்
திரள்தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பரமன் இந்நாள்
குழலூதக் கேட்டவர்கள் இடருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பரெல்லாம்
அமுத கீதவலையால் சுருக்குண்டு
நம்பரமன்றென்று நாணி
மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.
சிவந்து மிகவும் பெரிய திருக்கண்களையுடையனாய், பருத்த தோள்களையுடையனாய், தேவகியின்
பிள்ளையாய், தேவசிம்ஹமாய், நமக்கு ஸ்வாமியான பரமபுருஷனாயிராநின்ற கண்ணபிரான்- இன்றைய
தினம் வேய்ங்குழலை ஊத - அத்தகைய அற்புத இன்னிசையைக் கேட்டவர்கள், அவஸ்தைப்பட்ட
வகைகளை, சொல்லுகிறேன் கேளுங்கள் ! - அவ்விடர் யாதெனில் ஆகாசத்திலே திரியும்
காந்தருவர் அனைவரும் அமுதம் போல் இனிதான குழலிசையாகிற வலையிலே அகப்பட்டு பாடுகையாகிற
சுமை இனி நம்முடையதன்றென்று அறுதியிட்டு, முன்பெல்லாம் பாடித்திரிந்ததற்கும் வெட்கப்பட்டு,
அறிவழிந்து மனம் சிதிலமாகப் பெற்று, சோர்ந்து, சரீரமுங் கட்டுக்குலையப் பெற்று கைமறித்து
நின்றனர்; இனி நாம் ஒருவகைக் கைத்தொழிலுக்குங் கடவோமல்லோம் என்று கையை மடக்கிக் கொண்டு
நின்றார்கள் என்று பகிர்கிறார் பெரியாழ்வார் இந்த பாசுரத்தில்.
Here are some photos of Sri Azhagiya Singar ‘Murali Kannan’ thirukolam – the divine flautist and
ulpurappadu inside Thavana uthsava bungalow on 20.3.2025.
Circle of Iron referred
at the start is a 1978 martial arts fantasy film co-written by Bruce Lee,
who intended to star in the film himself, but died before production. The film
is also known as The Silent
Flute, which was the original title of the story conceived by Lee,
James Coburn and Stirling Silliphant in 1969. After Lee's death in 1973,
Silliphant and Stanley Mann completed the screenplay, and Lee's part was given
to Kung Fu television star David Carradine. In the 1960s, Bruce Lee was
working on The Silent Flute, but the project was never finished in his
lifetime.
Their script centered on a young martial
artist named Cord, whose main objective was to find a book that would
supposedly unlock the path to true enlightenment. Bruce Lee expected to
have a starring role in The Silent Flute, but he had no intention of playing
the main protagonist, who was supposed to be a white character. Instead, Lee
was to play various martial artists who would encounter Cord and teach him kung
fu and other valuable lessons along the way. Once they had a script
ready, scouting out locations for filming was unfortunately the furthest Lee,
Coburn, and Silliphant were able to get in making the movie. They traveled to
India and began looking for ideal locations. It was during this time that their
plan for The Silent Flute fell apart. Years passed by and death of Lee
occurred before Coburn and Silliphant decided to revisit The Silent Flute
which was completed later.
adiyen
Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.3.2025.
பாசுர விளக்கம் : ஸ்ரீ உ வே கச்சி சுவாமி ~ spl thanks & gratitude to www.dravidaveda.org