To search this blog

Wednesday, March 27, 2024

Sri Vayalali Manavalan thirukkalyana purappadu - on the fields ! 2024

திருமணங்கொல்லை கலியன் வைபவம் ~ திருவேடுபறி

 

Ever ventured out in the night on a village road enjoying the moonlight ! – walking on tough roads and fields ! – an out of World experience, if one were to be doing that walking alongside  divyadesa Emperuman purappadu 

பௌர்ணமி தினம் சிறப்பானது.  நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண சந்திரனையும்,  நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம். பங்குனி மாதம் வரும்   உத்திரம் கல்யாண விரத நாள். ஆண்டாள்- ரங்கமன்னார், திருவல்லிக்கேணியில் ஸ்ரீவேதவல்லி மன்னாதர்  திருக்கல்யாணங்களும் நடைபெறுகின்றன.  

திருவாலி தமிழ்நாட்டின்  சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்.  இவ்வூரும் இதற்கு 5 கிமீ தொலைவிலுள்ள திருநகரியும் இணைந்து  ஸ்ரீவைணவ  திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது.  திருமங்கை ஆழ்வார் வைபவம் நாம் அனைவரும் அறிந்ததே ! திருவல்லிக்கேணி ப்ரஹ்மோத்சவத்தில் எட்டாம் நாள் இரவு கலியன் வைபவம் பற்றி அடியேனும் எழுதி இருக்கிறேன். 

திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய், சோழ நாட்டில் திருமங்கை என்னும் பகுதியில், திருவாலி என்ற (திருநகரி) திவ்யதேசத்தின்  அருகே உள்ள திருக்குறையலூரில்  கலியுகத்தில் 398ஆவதான நள வருடத்தில் பௌர்ணமி திதி அன்று, வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திரம் ஆகியவை பொருந்திய கார்த்திகை மாதத்தில் ஒருவர்    சோழ அரசனின் சேனைத் தலைவர்களில் ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர் "நீலன்" என்று நிறம் கொண்டு பெயரிடப்பட்டார்.  

திருநகரியில் மூலவர்:      வேதராஜன் (வயலாலி மணவாளன்) வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம். உற்சவர் ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி, அம்ருத வல்லி.   இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது.  அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு  இத்தலத்திற்கு எழுந்தருளி  பல்லக்கில் புறப்பாடு கண்டருளும் பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின்  செவிகளில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார். வேதராஜபுரத்தில்  ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல் நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து திருவேடுபறி நடத்தி திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வேடுபறி மண்டபம் என்று வேடுபறி (எம்பெருமானிடம் திருமங்கைமன்னன்  கொள்ளையிட்ட இடத்தில்) நடந்த இடத்தில் ஒரு மண்டபமும் உள்ளது. 

இங்கே திருமங்கை மன்னனின் திருமொழி பாசுரம் ஒன்று:- 

ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*

ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*

நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*

மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!

 

வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள் அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.: https://youtu.be/Zhz2QPTmLFg

 


The celestial marriage of Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on hard roads, fields and difficult terrain.  It is an out of world experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of accompanying Emperuman on 24.3.2024.  Here is a video of the purappadu

 

adiyen  Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

27.3.2024 

Monday, March 25, 2024

Thiruvali Thiruther 2024

 

திருவாலி  ஸ்ரீ  வயலாலி மணாளன் திருத்தேர்



Thiruvali Vedupari 2024

Thirumangai mannan Vedupari Thirumanankollai


தீவட்டிகள் அணிவகுப்பில் கலியன் வேடுபரி