To search this blog

Friday, April 4, 2025

Sree Ramar Yanai vahanam 2022 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

Sree Ramar Yanai vahanam 2022 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ணிய கதை  இராமனின் கதையே !   அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு யாகத்தின் பலனாய் ஸ்ரீராமபிரான் அவதரித்தார்.  அவர் தம் காதை  "ஸ்ரீ இராமாயணம்".  தந்தை சொல் காக்க இராஜ்ஜிய பரிபாலனம் துறந்து, மரவுரி தரித்து,   கொடிய வனம் புகுந்து, கானகம் எல்லாம் திரிந்து, தர்மம் காத்தவன்   ஸ்ரீராமபிரான்.  அந்த யுக புருஷருக்கு  அவர்தம் பிறந்த புண்ணிய மண்ணிலே அற்புத ஆலயம் மிக்க ஆனந்தத்தை தருகிறது.


தொன்மங்கள் என்பது 'பழைமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழைமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் 'புராணம்' என்று   அழைக்கப்படுகிறது.   தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன.  எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. ~ கம்பராமாயணம் ஒரு அற்புத இலக்கிய விருந்து.  வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு  தமிழின் சுவை கூட்டி  கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்டதாகும். 

எம்பெருமான் ஸ்ரீராமனை நினைத்து கேட்டு இன்புறவல்ல ஒரு சினிமா பாடல் இங்கே : 

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே **

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே




படம் :  லவகுசா  - வரிகள் மதுரகாசி - 1963ஆம் ஆண்டு  வெளிவந்த லவகுசா திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலுமாக இரு மொழிகளில் வந்து ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  பல பக்தி படங்களில் அருமையாக நடித்த திரு என்.டி. ராமாராவ் ஸ்ரீராமர்! சீதையாக அஞ்சலி தேவி.  இசை கே.வி.மஹாதேவன்.   படத்தை இயக்கியவர்: புல்லையா.  தெலுங்குப் படத்தில் 37 பாடல்கள் பாடப்பட்டு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. தமிழிலோ *ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே* என்ற பாடல் சிரஞ்சீவி வரம் பெற்று இன்றும்  எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் கேட்கப்படுகிறது. மருதகாசியின் அற்புதமான சொற்களுக்கு கே.வி.மஹாதேவன் இசையில் பி.சுசீலாவும். பி.லீலாவும் பாடிய பாடல் இது.  இதை இணையத்தில் கேட்டு மகிழலாம். :

Telegu tinseldom (tollywood) can have justifiable pride in showcasing so many beautiful movies based on puranic / ithihasa stories, without deviation.  Pulliah was a great name of yesteryears.  Two masters of Telugu cinema, besides having a similar name, shared the distinction of huge success in  remaking their earlier box office hits. While Poludasu Pullaiah remade his 1939 big hit, Sri Venkateswara Mahatmyam in 1960, his contemporary Chithajallu Pullaiah came up in 1963, with the remake of his 1934 blockbuster hit, Lava Kusa. Interestingly both the remakes starred N.T. Ramarao in the lead.   

Lava Kusa, released in 1963 was obviously the life story of Sri Ramachandramurthi as told by Lava & Kusa, directed by CS. Rao and his father C. Pullaiah. The film's script was written by Samudrala Sr. The film was produced by Sankara Reddy under Lalita Sivajyothi Films. The film was shot in both Telugu and Tamil languages with the same title, but with slight differences in the cast. The film was a remake of 1934 film of same name which was also directed by C. Pullaiah. The story was  an adaptation of the Uttara Kanda from Ramayana and revolved around the around the roles of Lava and Kusa.  NTR was cast as Rama and Anjali Devi as Seethadevi. The Telugu version starred Kanta Rao, Shoban Babu, S. Varalakshmi, Kaikala Satyanarayana in supporting roles, replaced in that order by MR Radha and Manorama in Tamil.

Have read that production of remake started in 1958 but was hampered by financial constraints, then C Pullaiah’s health was a concern, so   his son C. S. Rao took over. The soundtrack featured 27 songs, with the musical score primarily composed by Ghantasala and KV Mahadevan, and the lyrics by Vempati Sadasiva and Samudrala Sr. (Telugu) and Maruthakasi (Tamil). The Telugu version of Lava Kusa was released on 29 March 1963, while the Tamil version was released the following month, on 19 April 1963. The former won the National Film Award for Best Feature Film in Telugu for that year. It was also dubbed in Kannada, and later in Hindi in 1974. This film was later remade with the title Sri Rama Rajyam in 2011.

At Thiruvallikkeni divyadesam, today was day 6 of ongoing Sree Ramanavami Uthsavam and Sri Ramapiran was on white silver elephant.  It was Thiruvasiriyam and Periya thiruvanthathi in the goshti;  

Could not attend today’s purappadu and here are some photos taken during last year Yanai vahana purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.4.2025  











Thursday, April 3, 2025

Sree Ramapiran Nachiyar thirukolam 2025 ~ உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

 

மனத்தாலும் வாயாலும் சிந்தையாலும் சொல்ல சொல்ல நன்மை பயக்கும் நாமம் 'இராம நாமம்'  - மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம் - மாதா பிதா குருவை மதித்த மன்னவன் நாமம்.  கம்ப ராமாயணம் இப்படி துவங்குகின்றது. 

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!

அன்னவர்க்கே சரண் நாங்களே"  

உடையவர்     எம்பெருமானாரைப் 108 பாடல்களால்  பாடிய    திருவரங்கத்தமுதனார் -  தமது இராமானுச நூற்றந்தாதியில் - ‘படிகொண்ட   கீர்த்தி   இராமாயணம்   என்னும்    பக்தி  வெள்ளம் - குடிகொண்ட   கோயில்   இராமானுசன்’  என்று    பாடினார்.  உலகம் முழுவதையும்  தன் புகழால் அகப்படுத்திக்   கொண்டது எனவும் பக்தி வெள்ளம்     எனவும்    இராமாயணத்தை      திருவரங்கத்தமுதனார் சிறப்பிக்கிறார். இந்தப் புகழின்உலக  மகா   காப்பியங்களுள்  தலை  சிறந்து  விளங்கும்  கம்பநாடனுடைய இராமகாதை ஆறு காண்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளது.  இராமாயணம் என்பது முதல்நூலால் வந்த காரணப் பெயர்.  இராமன் என்ற  சொல்லுக்கு   எல்லார்க்கும்    மனக்களிப்பு அளிப்பவன்   என்பது பொருள்.   இராம  சரிதத்துக்கு  இடமாயுள்ள  நூல்   - இராமாயணம்.  “ராமனை அடைவதற்கு  அல்லது  அறிதற்குக்   கருவியாயுள்ள நூல்”;  ‘ஸ்ரீராமாயணத்தால்  சிறையிருந்தவளேற்றஞ்   சொல்லுகிறது”   என்னும் ஸ்ரீவசநபூஷண        வாக்ய       பலத்தால்.          பிராட்டியின் வைபவத்தை உணர்த்தும்  நூல்  என்றும்   கூறலாம்.  

உலகங்கள் யாவையும் உருவாக்கி, காத்து, அழித்தலுமான விளையாட்டைச் செய்கின்ற தலைவன்   ஒருவனே. இவை அனைத்தும் அவன் ஒருவன் செயல்களே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான் கம்பன்.  இவற்றை மிகவும் எளிதாகச் செய்வதைச் சொல்லும்படியாக அவை அந்தத் தலைவனுக்கு இது வெறும் விளையாட்டே என்றும் சொல்கிறான். தொடர்ந்து செய்யப்படுவதால் இதை முடிவே இல்லாத அளவிட முடியாத அலகிலா விளையாட்டு என்றும் சொல்கிறான்.  அதி முக்கியமாக - அந்த தலைவனுக்கு வணங்குகிறோம், வாழ்த்துகிறோம் என்றெல்லாம் சொல்லாமல்,   சரண் அடைகிறேன் என்று அடிபணிகின்றான் கம்பன் -  ராமாயணத்தில் தொடர்ந்து சொல்லப்படும் சிறப்பு  தத்துவம் - சரணாகதித் தத்துவம்.  மங்கலச்     சொல்லொடு  தொடங்கவேண்டும்    என்பது   மரபு; அம்மரபின்படி ‘உலகம்’ என்ற  மங்கலச் சொல்  கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில்  முதலாக  எழுகிறது.  

 


இராமாயண நாயகனின் திருவவதார மஹோத்சவம் ஸ்ரீராமநவமி.  திருவல்லிக்கேணியில் ஐந்தாம் உத்சவத்தில் [2.4.2025] - ஸ்ரீராமபிரான் நாச்சியார் திருக்கோலத்தில், காருண்யம் மிகுந்த சீதா பிராட்டியாக சேவை சாதித்தார்.  அவர் கீழ் அண்ட ப்ரம்மாண்டங்களும், திருக்கோவில் கோபுரங்களும் அனைத்தும் அடக்கம்.   தாய் சீதையின் சிறப்பு கம்ப நாட்டாழ்வாரின் வரிகளில் : 

மொய் வளர் குவளை பூத்த    முளரியின் முளைத்த. முந்நாள்

மெய் வளர் மதியின் நாப்பண்    மீன் உண்டேல். அனையது ஏய்ப்ப.

வையக மடந்தைமார்க்கும்.    நாகர் கோதையர்க்கும். வானத்

தெய்வ மங்கையர்க்கும். எல்லாம்    திலகத்தைத் திலகம் செய்தார். 

தாமரையில்  குவளை  பூத்தது  போன்றன.  பிராட்டியின்  முகத்தே விளங்கும்  கண்கள்;  தாமரையின் உதித்த மூன்றாம் பிறை   போன்றது அவள்  முகத்தே  தோன்றும்  நெற்றி.  மூன்றாம் நாள்  திங்களிடையே உதித்த  விண்மீன் ஒன்று போன்றது அவள் நெற்றியில்  இட்ட  திலகம். திலம்  போலச் சிறந்து விளங்கும் பிராட்டியின் (நெற்றியில் தோழிமார்) திலகமிட்டு அழகு செய்தனர். 

 


எம்பெருமான் ஸ்ரீராமனின்  தாள் பணிந்து அவனிடம் சரண் அடைந்து உய்வோமாக !!

அடியேன் ஸ்ரீனிவாசதாசன் 
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
3.4.2025 

 

 

Wednesday, April 2, 2025

Thiruvallikkeni Sun going down behind the gopuram

 


Sunsetting behind Thiruvallikkeni Sri Parthasarathi thirukkovil gopuram

Thirumanjana kudam

 


Thirumanjana kudam @ Thiruvallikkeni Thavana uthsava bungalow

Sri Seshadri kainkaryabarar (at Thirumadapalli also)